தமிழகத்தில் ஒரே நாளில் 600 பேருக்கு கொரொனா தொற்று உறுதி! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது!
தமிழகத்தில் இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 399 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 21 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 8 பேருக்கு தொற்று இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், தென்காசி,தேனி, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று மட்டும் தமிழகத்தில் கொரொனா தொற்று 600 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் நடைபெற்ற இறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது.






