விசாகப்பட்டினம் விஷவாயு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவின் பாதிப்புகள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பலரது உயிரை பறித்து உள்ள இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமாகவும் அனைவரின் பாதுகாப்புக்கு பிரார்த்திப்பதாகவும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு நிலைமையை பிரதமர் கேட்டதாகவும் தேவையான உதவிகள் செய்ய உறுதி அளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினம் சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய தாக தெரிவித்துள்ளார்.

 

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற பிரார்த்திப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். விசாகப்பட்டினம் நிலவரம் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


Leave a Reply