--- --:--:-- --

தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்!

12

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

 

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாக பதிவாக கூடும் என்றும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon