உயிருக்கு போராடிய கண்ணாடி விரியன் பாம்பு…! சிகிச்சைக்கு பின் வனத்தில் விடப்பட்டது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய கண்ணாடி விரியன் பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வனத்தில் விடப்பட்டது.

 

சத்தியமங்கலம் பகுதியில் விளைநிலங்களை காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் சேதப்படுத்துவதால் வயலை சுற்றி மீன் வலைகளை அமைத்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். அவ்வாறு போடப்பட்டிருந்த வலையில் கொடிய நச்சுத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சிக்கியது.

 

தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பாம்புக்கு சுமார் 3 மணி நேரம் சிகிச்சை அளித்தார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து பாம்பு பண்ணாரி வனப்பகுதியில் விடப்பட்டது.


Leave a Reply