கணிசமாக உயர்ந்த இறைச்சி விலை…!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இறைச்சி விலை கணிசமான அளவு அதிகரித்து காணப்படுகிறது. சராசரியாக 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இறைச்சி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கோழி இறைச்சி கடந்த வாரத்தை விட கிலோவுக்கு 30 ரூபாய் அதிகரித்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

ஆட்டிறைச்சி விலை 640 ரூபாயிலிருந்து 720 ரூபாயாக உயர்ந்துள்ளது. திருச்சியில் கடந்த வாரம் 140 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி தற்போது 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆட்டிறைச்சி விலையில் கிலோ 40 ரூபாய் அதிகரித்து 760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

மதுரையில் கோழி இறைச்சி விலை 40 ரூபாய் உயர்ந்து 170 ரூபாய்க்கும் , ஆட்டிறைச்சி 50 ரூபாய் உயர்ந்து 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோவையை பொறுத்தவரை அதிக மாற்றம் இல்லாமல் கோழி இறைச்சி 200 ரூபாயாகவும் ஆட்டிறைச்சி 680 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.

 

உற்பத்தி குறைந்து இருக்கும் அதே நேரத்தில் தேவையும் அதிகமாக இருப்பதால் இறைச்சிகளின் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply