விஜய் பேசுவது போல ‘டீப்ஃபேக்’ வீடியோ: சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்குப் பதிவு..!
முதலமைச்சர் விஜய்யின் உருவம் மற்றும் குரலைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் முறைகேடாகப் பயன்படுத்தி, மக்களிடம் பண மோசடி செய்யும் நோக்கில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட ‘டீப்ஃபேக்’ (Deepfake) போலி வீடியோ தொடர்பாகச் சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் போலீசார் செப்டம்பர் 1-ம் தேதி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில், பல போலி வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபேஸ்புக் கணக்கிலிருந்து பகிரப்பட்டது தெரியவந்துள்ள நிலையில், அந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும், இதுபோன்ற போலி வீடியோக்களில் குறிப்பிடப்படும் எண்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சி.பி.சி.ஐ.டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




