--- --:--:-- --

தமிழகத்தில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகள்..!

8

ட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தமிழ்நாட்டில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம், மதுரை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே அரசு செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படவில்லை.

 

 

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் 19-08-2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்திய செவிலியர் கவுன்சில் விதிகளின் படி, ஒரு புதிய செவிலியர் கல்லூரி துவங்க போதிய படுக்கை வசதிகள் கொண்ட, தேவையான மருத்துவ பிரிவுகள் கொண்ட, தேவையான புறநோயாளிகள் எண்ணிக்கை, வெளி நோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சேவை மற்றும் அதற்கு தேவையான கட்டுமான தேவைகள் கொண்ட ஒரு தாய் மருத்துவமனை இருத்தல் அவசியம்.

 

 

இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு தற்போது செவிலியர் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 100 இடங்கள் வீதம் ஆண்டுக்கும் மொத்தம் 600 பி.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

 

இந்த 6 செவிலியர் கல்லூரிகள் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து நடத்திட தொடர் மற்றும் தொடரா செலவினமாக ரூபாய் 270 கோடி முன்மொழியப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசு நிதியில் 60 பி.எஸ்.சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி ஒன்றும் தொடங்க முன்மொழியப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

ஏற்கனவே உள்ள 6 செவிலியர் மருத்துவ கல்லூரிகளில் 440 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. 25 கல்லூரிகளில் டிப்ளமோ நர்சிங்க் இருக்கிறது. அங்கும் 1290 கூடுதல் டிப்ளமோ பணியிடங்களும் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon