பெரியார் வழியில் வந்தவர்கள் நாங்கள்… தோஷம் அல்ல, அறிவியல் பூர்வமாக தீர்ப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சட்டப்பேரவையில் தோஷம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பெரியாரை பற்றி பேசிய திமுக தற்போது தோஷத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. பெரியார் வழியில் வந்தவர்கள் நாங்கள். இந்தப் பிரச்சினையை அறிவியல்பூர்வமாகத் தீர்ப்போம்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “எங்களுடைய உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தைப் பற்றித்தான். எங்கள் துணைத் தலைவர் அவர்களுக்கு 2 நாட்களாக உடல்நிலை சரியில்லை. அவருக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் ஓ.பன்னீர்செல்வம் கேட்டார்” என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பெரியாரின் கொள்கைகளைப் போல, ஆன்மீகமும் எங்கள் இதயத்தில் உள்ளது” என்று கூறினார். இதனால் பெரியார் கொள்கை, அறிவியல்பூர்வமான அணுகுமுறை, ஆன்மீகம் மற்றும் ஜலதோஷம் தொடர்பான இந்த விவாதம் சட்டப்பேரவையில் கவனம் பெற்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




