ரீல்ஸ் போடுவதற்காக கச்சத்தீவு பிரச்சினை..!
எங்கள் உறுப்பினர் படகு பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் கச்சத்தீவு என்று Open செய்தார். அவர் Open செய்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் தெரியும். சட்டத்துறை அமைச்சரும் நீண்ட நேரம் இதுகுறித்து விளக்கமளித்தார்.
விவாதம் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதைத் திசைதிருப் வேண்டும் என்றால், ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்ல வேண்டும். அது குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும். பின்னர், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து, வெளியில் அவர்கள் அமைதியாகப் பேசுவது போலவும், திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பது போலவும் ஒரு Reels வெளியிடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்.
எங்கள் பகுதியை மட்டும் காட்டாமல், ஆளுங்கட்சியினரையும் காட்டினால்தான் அவர்களின் செயல் என்ன என்பது வெளியே புரியும் – முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




