குடிநீர் வசதிக்கு ரூ.1,000 கோடி – பழைய திட்டங்களை சீரமைக்க ரூ.300 கோடி – முதல்வர் விஜய்
மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
மேலும், பழமையான 33 கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மதுரை, கடலூர் மற்றும் சுற்றுவட்டார நகர்ப்புற, பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தவும், பழமையான கூட்டுக் குடிநீர் திட்டங்களை சீரமைத்து சீரான குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




