கோவை அருகே காட்டாற்றில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு

கோவை அருகே காட்டாற்றில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

 

பெரியநாயக்கன்பாளையம் மலைப்பகுதியில் உருவாகி 15 கிலோ மீட்டர் பயணித்து பவானி ஆற்றில் கலக்கும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் காரமடை அருகே உள்ள அம்மன் கோவில் பகுதியில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

 

இதனால் பாலத்தை கடக்க வழியில்லாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பாலத்தை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


Leave a Reply