தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் கேபினட் அமைச்சரை சேர்த்ததற்கு எதிரான வழக்கு..!
தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக்குழுவில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய கேபினட் அமைச்சரை சேர்த்ததை எதிர்த்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற நீதிபதி தீபாங்கர் தத்தா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், விசாரணையை கூடுதல் அமர்வுக்கு மாற்ற நீதிபதி எஸ்.சி. சர்மா அனுமதி அளித்துள்ளார். 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்குமாறும் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




