தங்கம் தான் ராதாவின் வீக்னஸ் – நடிகை அம்பிகா
நடிகை ராதா அளித்த ரூ.46 கோடி மோசடி புகார் தொடர்பாக விளக்கமளித்த அவரின் சகோதரி நடிகை அம்பிகா “நான் திருடியதாக ராதா சொன்னதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார். தனது அக்கா அம்பிகா மற்றும் தம்பி மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா புகார் அளித்திருக்கிறார். இருவரும் தனது 46 கோடி ரூபாய் பணத்தை செக் மோசடி மூலம் எடுக்க முயன்றதாக ராதா பரபரப்பு புகாரை அளித்திருக்கிறார்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை அம்பிகா, “இப்படி பட்ட செய்தியாளர் சந்திப்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய சகோதரி என் மீது புகார் தெரிவித்து இருக்கிறார். 43 கோடி, 46 கோடி என சொல்லி கொண்டு இருக்கிறார்கள். மனதிற்கு கவலையாக இருக்கிறது. ராதா செக் கொடுத்தார் என்பது உண்மை.
சொத்து தகராறை தீர்க்க ரூ.46 கோடிக்கான காசோலைகளை வழங்கியது ராதாதான். சொத்து விஷயத்தில் மொத்தம் தர வேண்டியது 97 கோடி ரூபாய். ARS கார்டன் எம்ஜிஆர் உருவாக்கியது. அந்த பெயரே எம்ஜிஆர் சொன்னது தான். ஏஆர்எஸ் கார்டன் நாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. அது உருவாக மூலக் காரணம் நான்தான். அப்படியான அந்தப் பெயர் தற்போது அங்கு இல்லை. அதை பார்க்கும் போது எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.
அந்த ஏஆர்எஸ் கார்டனில் எனது பங்கு தொடர்பாக ரொம்ப நாளாக எங்களுக்குள் பிரச்சினை நடந்து வருகிறது. அதேபோல் எங்களின் ஏஆர்எஸ் தயாரிப்பு நிறுவனத்திலும் எனக்கு பங்கு இருக்கிறது. அதை பற்றி எல்லாம் ராதாவிடம் பல முறை பேச முயன்றேன். எதற்குமே அவரிடம் இருந்து பதில் இல்லை. இதையடுத்து காவல்துறையிடம் புகார் கொடுத்தோம். அந்த புகாரின் விசாரணைக்கு 10 முறைக்கு மேல் சம்மன் அனுப்பியும் ராதா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இப்படி, எந்த ஒத்துழைப்பும் ராதாவிடம் இருந்து இல்லை. எனது நம்பரையும் பிளாக் செய்து வைத்திருக்கிறார்.
என்னுடைய தங்கம் அதிகமானது ராதவிடம் இருக்கிறது. அதை கேட்டால் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தங்கம்தான் ராதாவின் வீக்னஸ். தங்கத்தை பார்த்தால் அவர் ஒரு மாதிரியாகிவிடுவார். இரவில் தூங்கும் போது கூட அவருடைய பொருட்களை பத்திரமாக வைத்து கொள்ள கடியவர் ராதா. லாக்கரில் நம்பர் லாக் வைத்து போட கூடியவர் அந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்க கூடிய ஆள். அவர் செக் காணவில்லை என்று சொல்கிறார். வீட்டில் இருக்கும் பிரச்னைகளை வீட்டிலே முடிக்க வேண்டும் என நான் நினைத்தேன். எங்கள் சார்பில் 2 1/2 மாதங்கள் முன்பாகவே புகார் கொடுத்து விட்டோம்.
எங்கள் அம்மா இறந்தபோது செட்டில்மென்ட் தொடர்பாக பேசி முடிவு செய்யப்பட்டது. ஆனால் சொன்னபடி செட்டில்மென்ட் செய்யப்படவில்லை. நான் திருடியதாக ராதா சொன்னதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர் கையெழுத்திட்ட செக் எனக்கு தர வேண்டிய சொத்தின் பங்கிற்காக அவரே கொடுத்தது. கடைசியில் செக் கொடுத்துவிட்டு, அதை தடுத்து நிறுத்தியதும் அவர் தான்.
ராதாவின் கணவர் யார் என்னை மரியாதை இல்லாமல் பேசுகிறார். சட்டபூர்வமாக சென்று விசாரணை மேற்கொண்டு இருக்க வேண்டும். தங்களின் தாயின் விருப்பம் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும். ராதா சமரசத்திற்கு வந்தால் பார்க்கலாம். ராதாவின் கணவர் தான் இந்த பிரச்னைக்கு காரணம். 97 கோடி பணம் ராதாவிடம் இருந்து எங்களுக்கு வர வேண்டும்.” என்று அம்பிகா கண்ணீர் மல்க கூறினார். இதற்கிடையே, நடிகை ராதா நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




