கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

நாகை அருகே கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிர்தப்பினர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் பெய்த கனமழையால் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை முற்றிலும் மளமளவென இடிந்து விழுந்தது.

 

இந்த விபத்தில் வீட்டில் இருந்த மூன்று பேரும் உயிர் தப்பினர். சுனாமியில் பாதிக்கப்பட்ட அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கு பிரபல தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2007ஆம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட 68 வீடுகளில் பல வீடுகள் சேதம் அடைந்து குடியிருக்க தகுதியற்றதாக மாறியுள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் இதர வீடுகளும் இடிந்து விழும் ஆபத்து நிலவுவதாக கட்டிடங்களை புனரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.


Leave a Reply