--- --:--:-- --

வரும் ஞாயிற்றுக் கிழமை வங்கிகள் செயல்படும்!

2

செப்டம்பர் 28 முதல் 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

 

இந்த நிலையில், செப்டம்பர் 26 நான்காவது சனிக்கிழமை வருவதாலும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வழக்கம் போல 2 நாட்கள் வங்கிகள் இயங்காது.
அதை தொடர்ந்து வங்கி ஊழியர்களின் போராட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.இதனால், செப்டம்பர் 26 முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு நாடு முழுவதும் வங்கி கிளைகளின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவானது.

 

 

மேலும், அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறை என்பதால், வரும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன. வங்கி கிளைகள் சார்ந்த முக்கியமான பணிகளைச் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

 

இந்நிலையில் வங்கிகள் தொடர் 3 நாட்கள் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அனைத்து பொதுத்துறை வங்கிகளும் திறந்து இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாமல் இருந்தால் வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் மத்திய நிதி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon