--- --:--:-- --

வி.எஸ். பாபு எம்.எல்.ஏ. உடல்நிலை – நேரில் நலம் விசாரித்த முதல்வர் விஜய்!

1

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் அவரை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

 

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 10ஆம் தேதி காலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், பல்துறை நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

 

அந்தவகையில் நேற்று 23ஆம் தேதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக 2026 செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 

பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். அவரது உடல்நலக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்படுவதுடன், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 

இந்நிலையில் கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவை, தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon