--- --:--:-- --

ஜெம் வீரமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு!

9

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட்ஸ் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட ஜெம் வீரமணிக்கு தொடர்புடைய 5க்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனையின்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஜெம் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு நிலங்களை கடந்த பிப்ரவரி மாதம் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விற்பனை செய்த ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ரெய்டு நடைபெற்றுள்ளது.

 

 

இதில் முதல் நிலம் 43 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது நிலம் 36 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கிலிருந்து தப்புவதற்காகவே வீரமணி இந்த நிலங்களை விற்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon