பாறையை குடையும் இயந்திரம் மூலம் குழி தோண்ட திட்டம்

குழந்தையை மீட்பதற்கான போராட்டம் தொடர்ந்து 46 மணி நேரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது கடலூரிலிருந்து எந்திரம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பாறைகள் அந்த இயந்திரத்தின் மூலமாக துளையிட்டு 98 அடி வரை பாறையை குடையும் பணி என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகாக ராமநாதபுரத்தில் இருந்து கொண்டுவரப்படும் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு சிறுவனை மீட்கும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது மண் பரிசோதனைக்கு பிறகு பாறையை குடையும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் துளையிடும் பணி நடைபெற உள்ளது. 98 அடி வரை துளையிடப்பட்டு அதன் பிறகு எந்திரம் பயன்படுத்தப்பட்டு சிறுவன் மீட்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாற்பது மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. பாறையின் கலைத்தன்மை அதிகரித்துள்ளதால் அதைக் உடையக்கூடிய பற்கள் உடைந்துள்ளது. எனவே சிறுவனை மீட்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.


Leave a Reply