ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்: மீட்பு பணி வெற்றிபெற வாழ்த்தும் பிரபலங்கள்

தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணற்றில் சிறு குழந்தைகள் விழுவது தொடர கதையாகி இருக்கிறது என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆழ்துளை கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும் அதற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க வேண்டும் என்று கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க சுமார் 100 அடி ஆழத்திற்கு கீழே இறங்க உள்ள மீட்புப்பணி வீரர்கள் 3 பேருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கண்ணதாசன், திலீப்குமார் மணிகண்டன் ஆகிய மூன்று வீரர்கள் இயந்திரம் தோன்றும் குழியில் இறங்கி குழந்தையை மீட்க உள்ளனர் இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க நிலம் இறங்கும் வீரர்களை வாழ்விலே கண்ணீரோடு கை தட்டுகிறேன் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply