ராமநாதபுரத்தில் குப்பைக்கிடங்கில் 3.78 கிலோ தங்கக் கட்டிகள்!
ராமநாதபுரத்தில் 3.78 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரித்ததில், குப்பைக்கிடங்கில் தங்கம், நகை மற்றும் பணம் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குப்பைக்கிடங்கில் கிடைத்த நகை மற்றும் பணத்தை 5 பேரும் பிரித்துக்கொண்டிருந்தபோது சிக்கியதாகவும், சுமார் 28 சவரன் நகை மற்றும் ரூ.12.20 லட்சம் ரொக்கம் குப்பையில் கிடைத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், குப்பைக்கிடங்கில் இருந்து 3.78 கிலோ தங்கக் கட்டிகள் கிடைத்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




