‘பிகில்’ படம் தாமதத்தால் ‘திகில்’ கிளப்பி வன்முறை…! விஜய் “புள்ளிங்கோ” 30 பேர் கைது..! சிறையில் தான் தீபாவளி!!

கிருஷ்ணகிரியில், பிகில் படம் திரையிட தாமதமானதால், வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனால் இந்த தீபாவளி ஜெயிலில் தான் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

பல்வேறு சர்ச்சைகள்,தடைகளைத் தாண்டி விஜய் நடித்த பிகில் படம் திட்டமிட்டபடியே நேற்று அதிகாலை தமிழகம் முழுவதும் சிறப்புக் காட்சியாக ரிலீசானது. பிகில் படம் திரைக்கு வருமா? வராதா? என்ற பரிதவிப்பில் தவித்து வந்த விஜய் ரசிகர்களுக்கு, படத்தின் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி என முதல் நாள் இரவு வெளியான செய்தி பெரும் உற்சாகத்தை கொடுத்தது. உடனே அதிகாலையில் முதல் காட்சியைக் காண, இரவு முதலே தியேட்டர்களின் வாசலில் தவம் கிடக்க ஆரம்பித்தனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டரிலோ, அதிகாலைக் காட்சி திரையிட தாமதமாகியது.ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என கால தாமதமாக பொறுமை இழந்த ரசிகர்கள் , கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட ஆரம்பித்தனர். தொடர்ந்து, இந்த ரகளை வன்முறையாக வெடித்தது. தடுப்புகள், அருகிலிருந்த கடைகளின் விளம்பரப் பலகைகளை அடித்து நொறுக்கியதுடன், பொருட்களையும் எடுத்தெறிந்து வீசினர். இதனால் கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியே போர்க்களமானது. விரைந்து வந்த போலீசார், விஜய் ரசிகர்களை விரட்டினர்.

 

இதற்கிடையே தாமதமாக பிகில் படம் திரையிடப்பட, ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் தியேட்டருக்குள் ஓடி பதுங்கியதுடன், படத்தையும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் வெளியிலோ, ரகளை, வன்முறையில் ஈடுபட்ட விஜய் புள்ளிங்கோ யார்? யார்? என போலீசார் பட்டியல் தயாரித்து, படம் முடியட்டும் என தயாராக காத்திருந்தனர்.

3 மணி நேரம் பிகில் படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த கலாட்டா புள்ளிங்கோ 30 பேரை ஒரே அமுக்காக அமுக்கி திகில் கொடுத்தனர் போலீசார் . வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 30 பேர் மீதும் ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இவர்க ஒக்கு ஜாமீனும் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விஜய் புள்ளிங்கோக்களுக்கு இந்தத் தீபாவளி சிறையில் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


Leave a Reply