--- --:--:-- --

யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும்!

1

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதி கட்ட பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி வாக்காளர்களுக்காகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டு, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

 

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள்’ என்ற வரலாற்று நிகழ்வை படைத்திட வேண்டும்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி வாக்காளர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு, குறுக்கு வழிகளில் நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட தயாராக உள்ளனர்.

 

 

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் ‘துரோகத்திற்கும் அதிகார துஷ்பிரயோகத்திற்கும் இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள்’ என்ற வரலாற்று நிகழ்வை படைத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் பதிலடி கொடுக்க வேண்டும்!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon