இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் விபரீதம்!
சென்னையில் உள்ள இந்தியன் வங்கி தொழில்நுட்ப பிரிவின் தலைமை மேலாளரான கனிஷ்க் பாஜ்பாய் (57), சனிக்கிழமை அன்று ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலக கட்டிடத்தில் உள்ள 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதனை தற்கொலை வழக்காக போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
கனிஷ்க் பாஜ்பாய், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் சென்னை பீச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் வங்கி அலுவலகத்தில் பிற்பகல் 3.45 மணியளவில் நடந்துள்ளது. கனிஷ்க் பாஜ்பாய் உடனடியாக மீட்கப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
இருப்பினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





