--- --:--:-- --

சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவதை விட காய்கறி உணவு வழங்குவதே சரி!

4

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான சௌமியா அன்புமணி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். தாமிரபரணி ஆறு பற்றிய ஆய்வுக்காக வந்திருக்கின்றேன்.

 

 

தாமிரபரணியில் இருக்கும் கழிவுநீரைப் பற்றியும் அங்கு இருக்கும் பிரச்சனை பற்றியும் கடிதம் மூலமும், சட்டமன்றத்திலும் பேசியிருக்கின்றேன். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு இடைத்தேர்தல் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தாராபுரம் வேட்பாளர் பற்றி உருவ கேலி செய்திருக்கின்றார். யாரையும் உருவ கேலி செய்யக்கூடாது. எத்தனையோ நல்ல, நல்ல தகவல்கள் அவர் பேச்சில் இருந்தது.

 

 

அவர் இந்த உருவ கேலி செய்ததால் அவர் பேச்சின் சாராம்சம் மாறி இருக்கிறது. யாராக இருந்தாலும் உருவ கேலி செய்யக்கூடாது. மதுராந்தகத்தில் முதல்வர் ரோடு ஷோவில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி பறந்தது குறித்த கேள்விக்கு? அது யார் என்று தெரியவில்லை. பாமக வேட்டி கட்டிக்கொண்டு வந்தார்களா என்று நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

 

 

சமூக நீதி விடுதியில் மாட்டிறைச்சி வழங்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு கூறினார். இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? எந்த ஒரு விடுதியாக இருந்தாலும் உணவுப்பொருள் போடும்போது இறைச்சி போடுவது என்றால் அது பிரச்சனை தான். அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஃப்ரீசர் இருக்க வேண்டும், இல்லை என்றால் கெட்டு போய்விடும். ஒரே ஒரு துண்டில் கெட்டுப்போன கறி கலந்து விட்டால் வாந்தி, பேதி போன்ற உடற் பிரச்சனைகள் வரும். இறைச்சிக்கு பதில் காய்கறி தான் சரி. ஆகவே பாதுகாப்பாக சமைத்து போட முடிந்தால் நாம் போடலாம். பாதுகாப்பில்லாமல் இறைச்சி போடுவது பாதுகாப்பு இல்லை. ஆகவே காய்கறி சாப்பாடு தான் சரி என்றும் தெரிவித்தார்.

 

மேலும் தவெக வெற்றி கழக ஆட்சி குறித்து கேட்கும் போது? மூன்று மாதங்கள் தான் ஆகிறது. முதல் கட்டமாக 717 மதுக்கடைகளை மூடியது வரவேற்கின்றோம். சிங்கப்பெண் படை போன்ற பெண்கள் பாதுகாப்புக்காக திட்டங்களை அறிவித்து இருக்கிறார்கள், அதையும் நாங்கள் வரவேற்கின்றோம். 10,000 காவல் துறை பணிகள் உருவாக்கி அதில் பணிகளை போட உள்ளார்கள். காவல்துறை நிறைய தேவைப்படுகிறது.

 

 

காவல்துறை வலுவாக இருக்க வேண்டும். பலவீனமாக இருந்தால் பிரச்சனை தான். லஞ்சம், ஊழல் ஒழிப்பு முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். தமிழக வெற்றிக்கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைக்குமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? அன்புமணியிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon