பறக்கும் படை சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
மதுராந்தகம் மற்றும் ராமாபுரம் பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையின் போது, ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.47 லட்சம் மற்றும் ரூ.31.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அச்சிறுப்பாக்கத்தில் ரூ.2 லட்சமும், சோத்துப்பாக்கம் தனியார் விடுதியில் ரூ.13 லட்சமும், எலப்பாக்கம் அருகே ரூ.80 ஆயிரமும் கைப்பற்றப்பட்ட நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துத் தொகையும் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




