புகழேந்தி 24-ம் புலிகேசி என்றால்… 23-ம் புலிகேசி தினகரனா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பெங்களூரு புகழேந்தியை 24-ம் புலிகேசி என டிடிவி தினகரன் விமர்சித்ததற்கு, அப்போ 23ம் புலிகேசி தினகரனா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அமமுகவில் முக்கியத பெங்களூரு புகழேந்தி, தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து ஒதுங்கினார். இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து, 2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால் அவர் அதிமுகவில் சேருவார் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

புகழேந்தியின் இந்தச் சந்திப்பு குறித்து டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார். 24-ம் புலிகேசியாக புகழேந்தி உருவெடுத்துள்ளார் என்றும் தினகரன் கூறியிருந்தார்.

 

தினகரனின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் சுடச் சுட பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.24-ம் புலிகேசி புகழேந்தி என்றால், 23-ம் புலி கேலி டிடிவி தினகரனா? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியதுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி சந்தித்ததில் தவறேதுமில்லை.அம முக என்பது ஒரு கட்சியே அல்ல. அந்தக் கட்சி பெயரில் அம்மா பெயரை வைக்க தினகரனுக்கு அருகதையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Leave a Reply