மதுரை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

உசிலம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஷேர் ஆட்டோ எதிரே வந்த லாரியின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 3 பேர் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அசோக், முத்துலட்சுமி, பாக்கியம் அம்மாள், சத்யா, என்ற நான்கு பேர் மட்டுமே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள இரண்டு பேரை அடையாளம் காண முடியவில்லை.

 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .காயம் அடைந்த 3 பேரும் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply