தலைக் கவசம் அணிந்து எஜமானருடன் பயணிக்கும் செல்ல நாய்

எத்தனை முறை வலியுறுத்தினாலும் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்குவதும், அபராதம் கட்டுவதுமாக இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், எஜமானரின் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்துடன் பயணிக்கும் நாய் குறித்து டெல்லி காவல்துறை வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

 

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் டெல்லி போக்குவரத்து துறை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நல்ல பையன்.. இந்த நாள் இது போல் இருக்க வேண்டும்… என்ற வாசகமும் அதில் கூறப்பட்டுள்ளது .இந்த புகைப்படத்தை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.


Leave a Reply