--- --:--:-- --

பிக் பாஸ் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட் கைது..!

1

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை வர்ஷினி வெங்கட். பிக் பாஸ் தமிழ் 8வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து கவனம் பெற்றவர் வர்ஷினி. பிக் பாஸில் அதிக நாட்கள் இல்லை என்றாலும் தான் இருந்தவரை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

 

 

மொத்தமே மூன்று வாரம் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் அவர். எலிமினேட் ஆகும்போது போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுவது வழக்கம். ஆனால் வர்ஷினி சிரித்த முகத்தோடு வெளியே சென்றதோடு, பிக் பாஸ் வீட்டில் மூன்று வாரம் இருந்ததே தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாக விஜய் சேதுபதியிடம் வர்ஷினி கூறினார்.

 

 

தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்து கவனம் பெற்ற வர்ஷினி, சினிமாவில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். சினிமாவை அடுத்து அரசியலிலும் கால் பதித்துள்ள வர்ஷினி அண்மையில் முதலமைச்சர் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே, வர்ஷினி வெங்கட் குறும்படம் எடுப்பதற்காக முதலீடு செய்யுங்கள் எனக் கூறி தன்னை ஏமாற்றியதாக ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

பணத்தை கேட்டபோது கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி, பேச அழைத்து தன்னை தாக்கி, இரண்டு செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை பறித்ததாகவும், அதன் பின்னர் தொலைபேசியில் மிரட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் 5 லட்சம் ரூபாய் பறித்ததாகவும் சம்பந்தப்பட்ட நபர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 27 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தராவிட்டால் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வர்ஷினி வெங்கட், சஞ்சய் உட்பட 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கிண்டி போலீஸார் வர்ஷினியை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon