நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் – வங்கிகளின் சேவைகள் பாதிப்பு

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பணபரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டன.

 

பொதுத் துறை வங்கிகள் இணைப்புக்கும், வாராக் கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது .மதுரை கனரா வங்கி முன் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

 

நாடு முழுவதும் 2000 வங்கிகள் மூடப்பட்டுள்ளன எனவும், தொழிலதிபர்கள் கடன்களை பெற்று மோசடிகளில் ஈடுபட இது வாய்ப்பாக அமையும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது, ஊழியர்கள் குற்றம் சாட்டி முழக்கமிட்டனர்.

 

இந்த வேலைநிறுத்தம் காரணமாக 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply