அதிமுக 48-வது ஆண்டு விழா; எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

அதிமுகவின் 48-வது ஆண்டு விழா இன்று அக்கட்சியினரால் சிறப்பாக கொண்டாட்பபட்டது.சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் இனிப்பு வழங்கி விழா கொண்டாடினர்.

 

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் எம்.ஜி.ஆருக்கும் திமுக தலைவராகவும், முதல்வராகவும் இருந்த கருணாநிதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அதிமுகவைத் தோற்றுவித்தார் எம்.ஜி.ஆர். எனவே, ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கட்சியின் ஆண்டு விழாவை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

 

இன்று கட்சியின் 48-வது ஆண்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் இருவரும் அதிமுக கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

 

இந்த விழாவில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், மக்களவை முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Leave a Reply