பிசிசிஐ தலைவரானார் சவுரவ் கங்குலி..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முதல் தர கிரிக்கெட்டை வலுப்படுத்துவதே தனது முதல் நோக்கம் என தெரிவித்துள்ளார்.. பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் முறைப்படி தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்வில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

இதில் தலைவர் பதவிக்கு கங்குலி மட்டுமே மனு தாக்கல் செய்து இருப்பதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் செயலாளர் பதவிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் சாகும் பொருளாளர் பதவிக்கு இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரேம்குமார் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி இந்திய கிரிக்கெட்டில் இன் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாகவும் முதல்தர கிரிக்கெட்டை பொறுத்த வரை முதல் நோக்கம் எனவும் தெரிவித்தார். பிசிசிஐ தலைவராக ரங்கோலி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசியல் தலைவர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply