--- --:--:-- --

நீட் பயிற்சி மையம், பள்ளியில் 72 மணி நேரம் நடைபெற்ற ஐடி ரெய்டு

4

நாமக்கல்லில் தனியார் நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 72 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிரீன் பார்க்க கல்வி நிறுவனங்களில் நீர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது ஆக பரிதவிப்பு எழுந்துள்ளதாகவும் எழுந்த புகார்களை அடுத்து கடந்த 11ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.

 

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நாமக்கல் கரூர் சென்னை சென்னையில் உள்ள பயிற்சி மையங்கள் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அது நீர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் 30 கோடி ரூபாய் பணமும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

பயிற்சி மைய தாளாளர் இயக்குனர்கள் அவரது உறவினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என பலரிடம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சோதனை விசாரணை நிறைவு பெற்றது. இதில் மாணவர்களிடம் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை நிறுவனங்கள் வங்கி கணக்கு சொத்து ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon