--- --:--:-- --
images - 2026-09-24T122647.602

காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் கடந்த செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முன்னர் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி செப்டம்பர் 24-ந் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளது.

 

 

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்று (செப்டம்பர் 24) நிறைவு பெற உள்ளது.

 

 

அதேவேளையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள், நாளை (செப்டம்பர் 25) வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon