சேலத்தில் தமது தாய் தந்தையை மதுபோதையில் தவறாக பேசிய பெரியபாதை 15 வயது சிறுவன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ரெட்டிபட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். முருகேசனின் அண்ணன் சரவணனும் அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் மதுபோதைக்கு அடிமையான அவரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

தினமும் மது அருந்தி விட்டு தமது குடும்பத்தாருடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் மது போதையில் இருந்த சரவணன் தம்பி முருகேசன் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது மனைவியையும் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனால் முருகேசனின் 15 வயது சிறுவன் ஆத்திரமடைந்து அருகேயிருந்த கட்டையால் சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






