புழுதி மண்டலத்தில் கேரம்போர்டு அமைத்து ஏழை சிறுவர்கள் விளையாடுவது தொடர்பாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மண்டலத்தில் சதுர வடிவில் பேரமைப்பு சிறுவர்கள் கட்டங்களையும் நான்கு மூலைகளில் குறிகளையும் உருவாக்கினர்.
சிறிய பாட்டில் மூடிகளை கேரம் கால்களாகவும் பெரிய பாஜன் மூடிகளை ஸ்டைலாகவும் பயன்படுத்தி விளையாடுகின்றனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள ஆனந்த் மகேந்திரா இந்தியாவில் வறுமை ஒழிந்து விட்டதாக கூறப்படும் கற்பனைக் கதைக்கு எதிரான வலுவான சான்று இது என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. சிறுவர்கள் வறுமையை கடந்து மகிழ்ச்சிக்கான வழியை கண்டுபிடித்து விடுகின்றனர் என்பது குறித்த விமர்சனங்கள் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளன.






