சீனா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஈரான் என்னை கப்பல் மீதான தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது சவுதி அரேபியா அருகே உள்ள எண்ணெய் ஏற்றிச் சென்ற ஈரான் சரக்கு கப்பலை குறிவைத்து இரு ஏவுகணைகள் ஏவப்பட்டன ஏவுகணைகள் தாக்கியதில் சரக்கு கப்பலில் சேதமடைந்து கச்சா எண்ணெய் கடலில் கசிந்து வருகிறது.
தாக்குதலை நடத்தியது யார் என்று தெளிவாக தெரியவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. என்னை கப்பல் மீதான தாக்குதல் வளைகுடா நாடுகளை மீண்டும் பதற்றம் பற்றிக்கொண்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ளது கச்சா எண்ணை விலை உயர்வு குறித்து சீன அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அந்த இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் எட்டப்படும் பட்சத்தில் தேவை அதிகரிக்கும் என்பதும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளது.