உள்ளாட்சி தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ராமநாதபுரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான கொண்டுவரப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பத்திரப்படுத்த பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த மாவட்ட பாதுகாப்பு அனுப்பப்பட்டு வருகின்றன.

 

ஏற்கனவே 3000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நிலையில் இன்று இரண்டாவது கட்டமாக 1070 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன எந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையிலே பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என்பதால் அலுவலகம் முன் வைக்கப்பட்டிருந்தன.

 

ஆனால் ஆயுத பூஜையை முன்னிட்டு தாமதமாக பிரமுகர்கள் வந்ததால் சுமார் 4 மணி நேரம் எந்திரங்கள் வெளியே வைத்து காக்கப்பட்டன. பின்னர் பிரமுகர்கள் வந்ததையடுத்து அவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பத்திரப்படுத்தப்பட்டன.


Leave a Reply