சென்னையில் காவல்துறை வாகனத்தில் மோதி விட்டு சென்ற கார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு முகப்பேர் பகுதியில் நேற்று மாலை கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் ஒன்று ஐந்து மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார் காரை சோதனை என்ற போது திடீரென புறப்பட்ட அந்த கார் போலீஸாரின் வாகனத்தை இடித்துவிட்டு சென்றது. அதை கார் இன்னொரு இடத்தில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு போலீசார் விரைந்தனர் உடனடியாக அங்கிருந்து வந்த கார் வேகமாக கிளம்பியது. சந்தேகத்திற்கிடமான அந்த காரில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்தக் கார் ரபீந்திர ரெடி என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. இதனுடைய அந்தகாரத்தில் சாக்கடை கொள்ளையில் தேடப்பட்டுவரும் திருவாரூர் முருகன் இருந்ததாக வதந்தி பரவியது. இதனால் அந்த கார் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி வருகின்றனர்.






