பாஸ்போர்ட் இன்றி நட்சத்திர விடுதிக்கு வந்த நைஜீரிய இளைஞரிடம் காவல்துறை விசாரணை

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வந்தனை சீரியல் இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திக்கவுள்ளனர். இதன் காரணமாக சென்னை வரவுள்ள சீன அதிபர் இந்திய நட்சத்திர விடுதியில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் நட்சத்திர விடுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவில் நட்சத்திர விடுதிக்கு வந்த நைஜீரிய இளைஞரை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அந்த நைஜீரிய இளைஞர் தங்கியிருந்த பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் பாஸ்போர்ட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கார் மற்றும் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக்கூறி நைஜீரிய இளைஞரை அனுப்பி வைத்தனர்.


Leave a Reply