புதுச்சேரி அருகே திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் மூன்று மாத கர்ப்பிணி மனைவியும் கணவனும் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மதகடிப்பட்டு பகுதியில் பழச்சாறு கடை கடத்தி வந்த சிவகுமாருக்கு விஜயலட்சுமிக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.
விஜயலட்சுமி மூன்று மாத கர்ப்பம் என்று கூறப்படும் நிலையில் காலை ஆயுத பூஜையை முன்னிட்டு கடைக்கு பூஜை போடுவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிவகுமாருடன் கோபித்துக்கொண்டு விஜயலட்சுமி அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த சிவகுமார் சமய சிலிண்டரை திறந்து விட்டு தீயை பற்ற வைத்துள்ளார்.
தீ அரைகுறையாக பற்றிக்கொள்ள எரிவாயு வெளியேறியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறி அவரது உயிர் பிரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.