திருவாரூரில் ஐந்து கிலோ நகைகளுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் அந்த நகைகள் திருச்சியில் லலிதா ஜுவல்லரி கல் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளால் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பேருந்து நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி யில் சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திருவாரூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கினர். அதில் இருந்த ஒருவர் பையை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பினார்.
பையை சோதனை செய்தபோது அது ஐந்து கிலோ தங்க நகைகள் இருந்தன இதையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவர் பெயர் சுரேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது இதையடுத்து தப்பியோடிய சுரேஷின் உறவினர்கள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.