மேலூர் தும்பைப்பட்டியில் மயான வசதி இல்லை: தொடரும் அவல நிலை!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மயானத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்ய பெரும் துயரத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி யில் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவும் எரியூட்டும் மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த மயானத்தில் மின்விளக்கு தண்ணீர் முறையான சாலை மயான கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Leave a Reply