பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகள் மீது பேருந்து மோதி விபத்து
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிகள் மீது மோதிய கல்லூரி பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். பள்ளத்தில் தள்ளி விட்டனர். பெரம்பலூர் மாவட்டம் உள்ள சித்தாளை கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் பள்ளிக்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது அதே கல்லூரியை சேர்ந்த அந்த வழியாக வந்த இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது வேகமாக மோதியது. மேலும் அங்கு அரசு பேருந்துகள் என்று இந்த பள்ளி மாணவிகள் மீதும் அந்தப் பேருந்து மோதியது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய கல்லூரி பேருந்துகளை தாக்கி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தள்ளி விட்டனர். மேலும் மற்ற பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




