சென்னை கொரட்டூரில் காவல்துறை என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் சென்னை கொரட்டூரில் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வில்லிவாக்கம் பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் தான் தலைமறைவாகி இருப்பதாக விழுப்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் மற்றொரு உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோரை படிப்பதற்காக சென்னை வந்தனர். இந்த நிலையில் அவர் இருப்பது தெரிந்தவுடன் உடனடியாக அவரை பிடிக்கும் முயற்சியில் பிரகாஷ் ஈடுபட்டார்.
அதேபோல் பிரபுவும் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தான் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியால் பிரபுவின் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக அங்கு தப்பிச் செல்ல முயன்ற மணிகண்டனை பிரகாஷ் தனது கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார்.
மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி மணிகண்டன் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.