--- --:--:-- --

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

download

திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட உள்ளது. இத்தகவலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். திரைத் துறையில் நீண்டகாலம் சேவையாற்றிய திறமையாளர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கு நடிகர் அமிதாப் பச்சன் பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

எழுபத்தாறு வயது நிரம்பிய அமிதாப்பச்சன் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்ததோடு பல்வேறு திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 1969 ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் எங்கு வரும் அமிதாப் பச்சன் சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் விருதை மூன்று முறை பெற்றவர். இந்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் மூன்றையும் பெற்ற பெருமைக்குரியவர் விருது பெறும் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon