தமிழகம் முழுவதும் பட்டியல் இனத்தவர்க்கான மயானங்கள் மற்றும் அந்த மையங்களுக்கு செல்லும் சாலைகள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த மாரியம்மாள் என்கிற மூதாட்டியின் உடலை தண்ணீரில் தத்தளித்த படி அவரது உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மயானத்திற்கு செல்ல சாலைகள் இல்லாதது. சாலையின் குறுக்கே பாலம் அமைக்க இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மோகன்தாஸ் தமிழகம் முழுவதும் பட்டியல் இனத்தை மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மயானங்கள் எத்தனை மயானங்களில் அவர்களுக்கு போதுமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது மயானம் செல்ல சரியான சாலை வசதிகள் உள்ளதா ஆகியவை குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
One thought on “மயானம் விவகாரம் தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு”