விஜய் வருகைக்காகத் தயாராகும் தாராபுரம் ஹெலிபேட்
தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள மாருதி நகரில், முதலமைச்சர் விஜய் வருகைக்காக ஹெலிபேட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை தனி விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அங்கு விஜய் 50 கி.மீ. தூரத்திற்கு ரோடுஷோ நடத்த உள்ள நிலையில், அவரது வருகைக்காகத் தயாராகும் ஹெலிபேட்டை டிஜிபி சாமிநாதன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும், கடந்த 2021-ல் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டைத் தற்போதைய பயன்பாட்டிற்காகத் தயார்படுத்தும் தீவிரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




