--- --:--:-- --

மருத்துவத்துக்கான நோபல் பரிசு!

4

நரம்பு செல்களை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ மற்றும் ஒளி-தூண்டல் அயனி சேனல்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, 2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுளளது. கார்ல் டைசோரத், பீட்டர் ஹெக்மேன், ஜார்ஜ் நாகல் ஆகிய மூவருக்கு கூட்டாக நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

 

பீட்டர் ஹெக்மேன், ஜார்ஜ் நாகல் ஆகியோர் ‘கிளாமிடோமோனாஸ்’என்ற ஒற்றை செல் பாசியில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வே தற்போதைய மாபெரும் கண்டுபிடிப்புக்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பாசியின் மேல் பரப்பில் ‘சேனல்ரோடாப்சின்’ என்ற சிறப்புப் புரதம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்தப் புரதத்தின் மீது நீல நிற ஒளி படும்போது, அதில் ஒரு சிறிய பாதை திறக்கிறது. அதன் வழியே மின் துகள்கள் சென்று ஒரு மின் சிக்னலை உருவாக்குகின்றன.

 

 

இந்த ஆய்வுதான் ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’என்ற புதிய தொழில்நுட்பத்திற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த முறையில் ஒளியைப் பயன்படுத்தி நரம்பு செல்களைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம், நமது நினைவுகள், உணர்வுகள்,செயல்களை மூளை எப்படி உருவாக்குகிறது என்பதை விஞ்ஞானிகளால் தற்போது தெளிவாக ஆராய முடிகிறது.

 

 

கடந்த ஆண்டு, மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு மேரி இ. புருன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சக்ககுச்சி ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தில் முக்கியப் பங்காற்றும் ‘பெரிஃபெரல் இம்யூன் டாலரன்ஸ்’ தொடர்பான அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது அளிக்கப்பட்டது. புற்றுநோய், ஆட்டோ இம்யூன் நோய்களைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சைகளுக்கு இந்த ஆய்வுதான் அடித்தளமாக அமைந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon