தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி
தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பவனம் குப்புசாமிநாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இசையில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றுள்ளார். இவரது மனைவியான அனிதா குப்புசாமி அவர்களுடன் இணைந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




